கவிதை 01
தற்கொலை செய்துகொள்ள ஏங்குகிறது என் மனம்..!
அவள் பின்னிய கூந்தலை கயிராக
சுருட்டும் போது..!!!
கவிதை 02
கோவிலில் அழகு சிலைகள் அனைத்தும் அசையாமல் இருக்க..,ஒரு சிலை மட்டும் நகர கண்டேன்..!அவள் கோவிலை சுற்றிவரும் போது..!!
கவிதை 03
அன்பே..!!
வெளிவந்து விடாதே பௌர்ணமி அன்று..!
அந்த நிலவு கூட நிலை
குலைந்து விடும்..!!
நிலவுலகில் இப்படி ஒரு அழகியா
என்று வியந்து..!!!
கவிதை 04
காதலர் தினம் என்றும் புதியது இல்லை…ஆனால்..,ஒவ்வொரு முறையும் புதியதாய் உணர வைக்கிறாள்..;என் அழகிய தேவதை..!!!அவள் காதலை..!!!!
கவிதை 05
அவள் மௌனம் கூட அழகுதான்..!
காரணம்;
அதிலும் ஒரு இணைபிரியாத காதல் ஜோடி..!!
அவள் உதடுகள்..!!!!
கவிதை 06
நாளை பூக்கும் ரோஜாவிடம் சொன்னேன்..!என் தேவதை வரும் முன்பு நீ மலர்ந்து விடாதே என்று..!!ஏனென்றால்,அவள் அழகை பார்த்து அழகிய ரோஜா வாடி விடும் என்பதால்..!!!