காத்திருப்பதும் சுகம்தான்..! காதலில்



கவிதை 01:


நான் அவளிடம் ஒரு வார்த்தையாவது பேச நினைத்தேன்..,
ஆனால்;
அவள் மட்டும் அல்ல அவள் கொலுசும் கூடசெல் செல்” என்கிறது என்னை..!!!


கவிதை 02:

காலமெல்லாம் அவளுக்காக காத்திருப்பேன்..!!
என் காதல் கைகூடும் என்ற நம்பிக்கையில் அல்ல;
என்றாவது ஒருநாள் அவள் கண்கள் என்னை தேடும் என்ற நம்பிக்கையில்..!!

கவிதை 03:

என் நினைவோடு அவள் இருந்தால்..,
உயிரோடு நான் இருப்பேன்..!!
என்னை மறக்காமல் அவள் இருந்தால்..,
மறுபிறவியும் நான் எடுப்பேன்..!!!
என்றென்றும் அவள் அன்புக்காக….!!!!


கவிதை 04:

அழகை கூட ரசிக்க தெரியாத மனம் எனக்கு..!!
ஆனால்;
அழுகையை கூட ரசிக்க கற்றுக் கொண்டேன்..,
அவளை காதலித்த பின்பு..!!

கவிதை 05:


ஒரு பெண்ணை உண்மையாக நேசித்து பார்..!
உன் அருகில் ஆயிரம் பெண்கள் இருந்தாலும்..,
உன் மனம் காதலியை மட்டும் தான் தேடும்..!!!!


கவிதை 06:

ஆயுள் முழுவதும் அவளுக்காக காத்திருக்க நான் தயார்..!
மரணம் போல அவளும் நிச்சயமாய் வருவாள் என்றால்..!!

கவிதை 07:


சிறிது தூரம் நடக்கவே சலித்துக் கொண்ட நான்;
இன்று வெகு தூரம் நடக்கிறேன்..!!
விடை தெரியாமல், அவள் பின்னால்..!


கவிதை 08:

யாருக்கும் தெரியாமல் நீ அவளை நேசி..!!
ஒரு நிமிடமாவது..,
அவளுக்கும் தெரியாமல் உன்னை நேசிப்பாள்..!!!

கவிதை 09:


ஒரு வார்த்தையில் உயிர் வாழ்வதும்..,
ஒரு வார்த்தைக்காக உயிர் விடுவதும்..,
காதலில் மட்டும்தான்..!!


கவிதை 10:

அவள் படிக்கும் புத்தகத்தில், எழுத்துக்களாக பிறக்க ஆசை..!
அப்போதாவது அவள் பார்வை என் மீது பட்டு,
அவள் உதடுகள் என்னை உச்சரிக்கும் என்று..!!

கவிதை 11:


எனக்கு மட்டுமே சொந்தம் என்று எதையும் நான் நினைத்தது இல்லை..!
அவளை பார்க்கும் வரை..!!


கவிதை 12:

பார்க்காத பொழுது இதயம் பேச துடிக்கும்..!
ஆனால்;
பார்க்கும் பொழுது இதழ்கள் பேச மறுக்கும்..!!
உண்மையான காதலில்..!!!