பெண்ணே..!!
உன் உடல்
உனக்கு சொந்தம்..,
உனக்கு
திருமணம் ஆகும் வரை..!!
உன் அழகு
உனக்கு சொந்தம்..,
உனக்கு
குழந்தை பிறக்கும் வரை..!!
உன் இளமை
உனக்கு சொந்தம்..,
உனக்கு
முதுமை வரும் வரை..!!
உன் சொந்தபந்தங்கள்
உனக்கு சொந்தம்..,
உன் செல்வம்
மறையும் வரை..!!
ஆனால் நினைவில்
கொள் பெண்ணே..!
என் காதலென்னும்
அன்பு உனக்கு சொந்தம்..,
உ(எ)ன் ஆயுள்
முடியும் வரை..!!