உன்னை தேவதை
என்று நினைத்து, பூஜிக்க மட்டும் விரும்பவில்லை..!
என் தாயாக
நினைத்து, மரியாதை மட்டும் அளிக்க விரும்பவில்லை..!
என் தோழியாக
நினைத்து, தோள் சாய மட்டும் விரும்பவில்லை..!
என் காதலியாக
நினைத்து, உன் அழகை மட்டும் ரசிக்க விரும்பவில்லை..!
என் மனைவியாக
நினைத்து, பள்ளியறை பாடம் மட்டும் படிக்க விரும்பவில்லை..!
நீ எந்தன்
சரிபாதி..!
உன் கண்கள்
கலங்கினால், கலங்குவது என் கண்களும்தான்..!
உன் இதயம்
நின்றால், பிரிவது என் உயிரும்தான்..!!