என் தாய்க்கு
அடுத்ததாக நான் நேசிக்கும் முதல் பெண் நீதான்..!
என் வாழ்வில்
இதுவரை பார்த்த பெண்களிலே நான் ரசித்த முதல் பெண் நீதான்..!
காதலென்னும்
கவிதையை முழுதாய் என் மனதில் பதிய வைக்க வந்த முதல் தேவதை நீதான்..!
நூறு குழந்தைகள்
நமக்கு பிறந்தாலும் நான் நேசிக்கும் முதல் குழந்தை நீதான்..!
ஆயிரம்
கவிதைகள் நான் படைத்தாலும் என்றென்றும் என் முதல் கவிதை.., அது நீதான்..!!